×

கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் கிராம முன்னேற்ற விவசாயிகள் குழு கூட்டம்

 

கறம்பக்குடி, செப். 2: கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அதிரான்விடுதி கிராமத்தில் கிராம முன்னேற்ற விவசாயிகள் குழு கூட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த விவசாயிகள் பயிற்சி யில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி தலைமை வகித்து, வேளாண் விரிவாக்க திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். திட்ட செயல்பாடுகள் குறித்து, கறம்பக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நெப்போலியன், கலைஞர் ஒருங்கிணைந்த திட்ட தொகுப்பு கிராமங்களின் செயல்பாடுகள் குறித்து வட்டார துணை வேளாண்மை அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் விரிவாக விளக்கினர்.

வேளாண்மை கிடங்கில் உள்ள இடு பொருட்கள் மற்றும் விதை இருப்பு, அதன் முழு விலை மற்றும் மானிய விலை குறித்து முழு தகவல்களையும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை திட்ட பொறுப்பு அலுவலர் குணசேகரன், நெல் விதை நேர்த்தி தொழில் நுட்பம் குறித்து கறம்பக்குடி வேளாண் வட்டார தொழில்நுட்ப மேலாளர் மணிமேகலை ஆகியோர் பேசினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் மணிமேகலை, உதவி தொழில்நுட்ப மேலாளர் கள் கவியரசன், வீரமணி ஆகியோர் செய்திருந்தனர். விவசாயிகள் பயிற்சி குழு கூட்டத்தில், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள், பெண் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர் மஹாலிங்கம் நன்றி கூறினார்.

The post கறம்பக்குடி வேளாண் வட்டாரத்தில் கிராம முன்னேற்ற விவசாயிகள் குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Village Progress Farmers Group Meeting ,Karambakudi Agricultural District ,Karambakudi ,Athiranvidhudi ,Karmbakkudi ,Village Development Farmers Committee ,Dinakaran ,
× RELATED கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி