×

கரூர் பகுதியில் விடுபட்ட தார்ச்சாலை அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்த கோரிக்கை

கரூர், ஜூன் 15: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட விடுபட்ட சில பகுதிகளில் தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தாந்தோணிமலை போன்ற பகுதிகளில் பழுதடைந்த சாலைகள் சில வாரங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டன. ஆனால், இதே பகுதிகளில் வெங்கடேஷ்வரா நகர், மில்கேட், வஉசி தெரு, எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைப்பகுதிகள் கடந்த 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. எனவே, விடுபட்ட பகுதிகளாக உள்ள இந்த பகுதி சாலைகளை தார்ச்சாலையாக உயர்த்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் மோசமான நிலையில் உள்ள இந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் பகுதியில் விடுபட்ட தார்ச்சாலை அமைக்கும் பணிகள் விரைவுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dharchal ,Karur ,Karur Corporation ,
× RELATED பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் மீன்...