- கரூர் சுங்க வாயில்
- தாந்தன்ரிமலை
- கரூர்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திண்டுக்கல்
- குஜிலியம்பாளையம்
- நெடுஞ்சாலைகள் துறை
- தின மலர்
கரூர், ஆக. 15: தமிழகம் முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் உள்ள சாலைகள் அதிக அளவில் தேசிய சாலைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் முதல் திண்டுக்கல் வரை குஜிலியம்பாறை வழியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. கரூர், சுங்ககேட் முதல் வெங்ககல்பட்டி பகுதி வரை தற்போது வடிகால் வசதி 3.45 அடி ஆழமும், 3.45 அடி அகலமும் உள்ளவாறு கட்டப்படுகிறது.
மேலும் மழை காலங்களில் ரோடுகளில் செல்லும் மழைநீர் எளிதாக இரு புறமும் உள்ள வடிகால் உள்ளே செல்வதற்கு வசதியாக 20 அடிக்கு ஒரு இடத்தில் வலையுடன் கூடிய துளை அமைக்கப் பட்டுள்ளது.
தாந்தோன்றிமலை, குடித்தெரு சிண்டிகேட்பகுதி, காவேரி நகர், தான்தோன்றி மலை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் தேங்காமல் நேரடியாக வடிகால் வசதி பகுதிக்கு செல்லுமாறு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சாலையின் இரு புறமும் கட்டாயமாக அகற்ற வேண்டிய மரங்களை மட்டுமே அகற்றிவிட்டு மீதி மரங்கள் அகற்றப்படாமல் அதற்கு ஏற்றார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வடிகால் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏற்றார் போல் பேவர் பிளாக்கல் பதிக்கப்பட்ட பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலையில் இருபுறமும் பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
The post கரூர் சுங்கக்கேட் முதல் தான்தோன்றிமலை வரை ரூ.4 கோடியில் நடை பாதையுடன் வடிகால் வசதி பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.