×

கரூரில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், ஜூன்25: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 30ம்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அப்போது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூரில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,District Collector ,Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED கரூர்- திருச்சிராப்பள்ளி ரயில்வே...