×

கருப்பட்டங்குறிச்சி செல்வ மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா

 

குன்னம், மே 7: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கருப்பட்டங்குறிச்சி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் செல்வ மாரியம்மன் கோயிலில்சித்திரை திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமம் நடைபெற்றது பின்னர் சிறப்பு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை அதைத்தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணி அளவில் மாவிளக்கு பூஜை பொங்கல் வைத்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வானவேடிக்கையுடன் மேளதாளங்களுடன் திரு வீதி உலா நடைபெற்றது. வயலூர் கருப்பட்டங்குறிச்சி கீழப்பெரம்பலூர் கிராம மக்கள் செல்வ மாரியம்மனை தரிசித்து வழிபட்டனர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர் சக்திவேல் ஆகியோர் செய்து இருந்தனர்.

The post கருப்பட்டங்குறிச்சி செல்வ மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா appeared first on Dinakaran.

Tags : Chithirai festival ,Karuppattankurichi Selva Mariamman Temple ,Kunnam ,Selva Mariamman Temple ,Karuppattankurichi ,Kunnam taluk ,Perambalur district ,Ganapathi Homam ,Thirukalyanam… ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...