×

கமுதி அருகே பெருநாழியில் பாகமுகவர்கள் கூட்டம்

கமுதி, நவ.12: கமுதி அருகே பெருநாழியில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தலின் பேரில், நடைபெற்ற கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக அமோக வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு செயல்படுவது குறித்தும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் வரும் 16, 17ம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்காளர் சேர்த்தல், நீக்கல் முகாம்களில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் நீக்கல் ஆகிய பணிகளை பாக முகவர்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் காந்தி, பொருளாளர் கந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் காளீஸ்வரிமுருகன், உதயகுமார், ஆத்திமுத்து மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணசாமி, ராமசாமி, போஸ், கிளைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், பாக முகவர்கள்,க ட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கமுதி அருகே பெருநாழியில் பாகமுகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Perunazhi ,Kamudi ,DMK South Union ,Velmurugan ,DMK ,Katharpatsa Muthuramalingam ,MLA ,DMK South ,
× RELATED பத்திரப்பதிவில் 1164 புகார்களில் 193 மனுக்கள் மீது நடவடிக்கை