×

கதிர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

 

கோவை, மே 6: கோவை கதிர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் கதிர், செயலாளர் லாவண்யா கதிர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கல்லூரியின் ஐகியூஏசி தலைவர் டாக்டர் ஜெகதீஷ் குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் உதயகுமார் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். கல்வி ஆண்டில் முதன்மை பெற்ற, போட்டிகளில் வெற்றி பெற்ற, கல்வி மற்றும் கலை போன்ற துறைகளில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கம்ப்யூட்டர் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை தலைவர் டாக்டர் மிதிலா நன்றி கூறினார்.

The post கதிர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Kathir Engineering College Annual Festival ,Coimbatore ,Kathir ,Kathir Educational Group ,Lavanya Kathir ,Dr. ,Jagadish Kumar ,IQAC ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...