×

கண்டாச்சிபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது-630 மதுபாட்டில்கள் பறிமுதல்

கண்டாச்சிபுரம் : விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் பகுதியில் ஒரே நாளில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மிலாடி நபி பண்டிகையையொட்டி நேற்று தமிழகம் மற்றும் புதுவையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதா உத்தரவின் பேரில், துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்டாச்சிபுரம் உதவி ஆய்வாளர் மருதப்பன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்டாச்சிபுரம் இருளர்பாளையம் பகுதியை சேர்ந்த லியாகத் அலி மகன் பாருக்பாஷா (29) என்பவரின் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் திடீரென சோதனை நடத்தி, அவரது வீட்டில் இருந்து சுமார் 550 தமிழ்நாடு மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.இதனை தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதுபோன்று நேற்றைய தினமே கண்டாச்சிபுரம் அடுத்த மலையரசன்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் மனைவி சுமதி (37),  மற்றும் செந்தில் மனைவி ரஞ்சிதா (30) ஆகியோரின் வீடுகளிலும் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அதில் சுமதி வீட்டில் 50 மதுபாட்டில்களும், ரஞ்சிதா வீட்டில் 30 மதுபாட்டில்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து உதவி ஆய்வாளர் மருதப்பன் மற்றும் போலீசார், 2 பெண்கள் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து இரு பெண் உள்பட 3 பேரை வேடம்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் கண்டாச்சிபுரம் அருகே நேற்றைய முன்தினம் அதிகாலை வாகன சோதனையில் 50 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது….

The post கண்டாச்சிபுரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் அதிரடி கைது-630 மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Villupuram district ,Dinakaran ,
× RELATED விஷ சாராயம் தயாரிக்க பயன்படும்...