×

கணினிமயமாகி வரும் மின்சார வாரியம்: ஸ்மார்ட் மீட்டர்களுக்கு காத்திராமல் மின்சார பயனீட்டு அளவைக் கணக்கிட செல்போன் செயலி அறிமுகம்

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமான டேன்ஜெட்கோ முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டேன்ஜெட்கோவின் இயக்குநர் வாரியம் தொடங்கி நிலக்கரி, காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் வரை கணினிமயமாக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இதன்மூலம் வீண் விரயம் தவிர்க்கப்பட்டு பல்வேறு நிலையில் நஷ்டம் குறைய வழி ஏற்படும் என்றும் அவர் கூறினார். ஸ்மார்ட் மீட்டர்களுக்காக காத்திருக்காமல் வீடுகளுக்கான மின்சார நுகர்வோரின் பயனீட்டு அளவைக் கணக்கிட செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த உயர் அதிகாரி தெரிவித்தார். கணக்கீட்டாளர் தனது செல்போன் செயலில் மீட்டரின் மின் பயன்பாட்டு அளவை பதிவு செய்ததும் செலுத்தவேண்டிய கட்டண விவரங்கள் நுகர்வோரின் செல்போனுக்கு  குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று அவர் கூறினார். இதுவரை பரிசோதிக்கப்பட்ட 27 பகுதிகளில் இந்த செயலி சரியாக செயல்படுவது தெரிய வந்திருப்பதாகவும் அவர் கூறினார். எனவே சென்னை மற்றும் வேலூரில் செயலியை பயன்படுத்த கணக்கீட்டாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் டேன்ஜெட்கோவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.             …

The post கணினிமயமாகி வரும் மின்சார வாரியம்: ஸ்மார்ட் மீட்டர்களுக்கு காத்திராமல் மின்சார பயனீட்டு அளவைக் கணக்கிட செல்போன் செயலி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tangetco ,Tamil Nadu Electricity Board ,Dinakaran ,
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...