×

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் நகை பறிப்பு பைக் ஆசாமிகள் 2 பேருக்கு வலை குடியாத்தம் அருகே துணிகரம்

குடியாத்தம், நவ.16: குடியாத்தம் அருகே கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் நகைகளை பைக் ஆசாமிகள் பறித்துச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம், நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அனுராதா(44). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம்-பேரணாம்பட்டு சாலையில் நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வீட்டின் அருகே சென்றபோது ஹெல்மெட் அணிந்து கொண்டு ஒரே பைக்கில் வந்த 2 வாலிபர்கள், அனுராதாவின் கழுத்தில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அனுராதா, ராம் இருவரும் நிலதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் பைக் ஆசாமிகள் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அனுராதா குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

The post கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் நகை பறிப்பு பைக் ஆசாமிகள் 2 பேருக்கு வலை குடியாத்தம் அருகே துணிகரம் appeared first on Dinakaran.

Tags : Savaran ,Kudiatham ,Sriram ,Govindhapuram ,Vellore district ,Sawaran ,Velabuditham ,
× RELATED அரசு பள்ளிகளை தரம் உயர்த்த...