×

கட்டுமாவடி முத்துமாரியம்மன் கோயிலில் சமய நல்லிணக்க வழிபாடு

அறந்தாங்கி, மே 29: அறந்தாங்கி அடுத்த கட்டுமாவடி முத்துமாரியம்மன் கோயிலில் சமயக நல்லிணக்க வழிபாடு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இந்துகள் மற்றும் முஸ்லீம் சமூகத்தினர் இணைந்து முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு சேக் இஸ்மாயில் அலியுல்லா தர்கா மற்றும் அப்பகுதியை சேர்ந்த இந்துக்கள் இணைந்து நேற்று மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதில், கட்டுமாவடி பகுதியை சேர்ந்த கிராமத்தினர் ஜமாத்தார்களும், ஏனாதி கிராமத்தார்களும் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.

The post கட்டுமாவடி முத்துமாரியம்மன் கோயிலில் சமய நல்லிணக்க வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Muthumariamman Temple ,Katumavadi ,Aranthangi ,Muthumariamman ,Temple ,Katumavadi, Pudukkottai ,Vaikasi month festival ,Muthumariamman Temple… ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...