×

கடையநல்லூர் அருகே புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது

கடையநல்லூர் : கடையநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர். கடையநல்லூர் அருகே கண்மணியாபுரத்தில் ஒரு பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த கடையை சோதனை நடத்தினர். அப்போது  8 மூடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைதொடர்ந்து கடை உரிமையாளர் கண்மணியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜா மகன் செல்லையா (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.52 ஆயிரத்து 800 மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்….

The post கடையநல்லூர் அருகே புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Dinakaran ,
× RELATED கடையநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை ரத்து