- கடலூர், புதுச்சேரி
- கடலூர்
- புதுச்சேரி
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அரபிக் கடல்…
- தின மலர்
கடலூர், மே 25: கடலூர் மற்றும் புதுவை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் புதுவை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி கடலூர் துறைமுகம் மற்றும் புதுவை துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இது தூரத்து புயல் எச்சரிக்கையை குறிப்பதாகும்.
The post கடலூர், புதுவை துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் appeared first on Dinakaran.
