×

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி!!

சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை தமிழக முதலமைச்சராகவும், 2017 முதல் 2021 வரை தமிழக துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், இரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் என்னும் இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 64. உடல் நலக்குறைவால் கடந்த 22ம் தேதி ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஓபிஎஸ்சின் அரசியல் வாழ்க்கைக்கு பக்கத் துணையாக இருந்த விஜயலட்சுமியின் மறைவு அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர்.ஓ பன்னீர் செல்வத்தின் கையை பிடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து,அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள ஓபிஎஸ்சின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் ஓபிஎஸ்சின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன….

The post ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி!! appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Chief Minister ,M. K. Stalin ,Edappadi Palaniswami ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Vijayalakshmi ,AIADMK ,
× RELATED கட்சியைக் கைப்பற்றுவதை விட காப்பாற்றுவதே முக்கியம்: ஒ.பன்னீர்செல்வம்