ஓசூர், ஆக.15: ஓசூர் பகுதிகளில் தக்காளி வரத்து குறைந்ததால் கடந்த சில மாதங்களாக விலை படிப்படியாக உயர்ந்து ₹150ஐ எட்டியது. இதனால் நடுத்தர மக்கள் சமையலுக்கு தக்காளியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பின்னர், தமிழக அரசு வெளி மார்க்கெட்டை விட உழவர்சந்தை மற்றும் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்தது. அதேபோல் ஓசூர் உழவர்சந்தையில் நாட்டு தக்காளி, வீரியம் ரகம் என தரம் பிரத்து ₹100 முதல் ₹140 வரை விறபனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது உழவர் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பால் கடந்த இரு தினங்களாக தக்காளி விலை படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. நேற்று உழவர் சந்தையில் ₹60, ₹70, ₹80 என்ற விலைக்கு 3 ரகங்களாக விற்பனை செய்தனர். தக்காளி விலை ஓரளவுக்கு குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post ஓசூர் உழவர் சந்தையில் தக்காளி விலை குறைந்தது appeared first on Dinakaran.