×

ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியா முழுவதும் உள்ள 45 ஒன்றிய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இருக்கின்ற பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான 1.8 லட்சம் இருக்கைகளை நிரப்ப ஏதுவாக, 2022-23ம் கல்வியாண்டிலிருந்து ஒன்றிய  பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வினை எழுதத் தகுதியுடையவர்கள் என்றும், 12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் தரப்படாது என்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவ, மாணவியர், பெற்றோர்கள் மற்றும்  கல்வியாளர்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.இருந்தாலும், இதனை திரும்பப் பெறத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தப் பிரச்னையை ஒன்றிய அரசின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்று, தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, நுழைவுத் தேர்வு அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post ஒன்றிய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வை தடுத்து நிறுத்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : OPS ,Chennai ,AIADMK ,Coordinator ,O. Panneerselvam ,India ,
× RELATED அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மூத்த...