×

ஐந்து முக்கிய அரசாணைகள் அடித்தட்டு மக்களுக்கு மகிழ்ச்சி: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை

சென்னை: ஐந்து முக்கிய அரசாணைகள் அடித்தட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் கூறியுள்ளார். இதுகுறித்து, எர்ணாவூர் ஏ.நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் நேற்று முன்தினம் காலை தலைமைச் செயலகத்திற்கு வந்து தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதிகளை  நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அரசாணைகள் பிறப்பித்தார். இந்த அரசாணைகள் அடித்தட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேர்தல் பரப்புரையின் போது மாவட்டந்தோறும் மக்கள் பிரச்னைக்கு 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்ததை  கருத்தில்கொண்டு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்க முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்பது உள்ளிட்ட முக்கிய 5 அரசாணைகள் தமிழக மக்களுக்கு பெரும்  மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழக முதல்வர் அறிவிப்புகளுக்கு சமத்துவ மக்கள் கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது….

The post ஐந்து முக்கிய அரசாணைகள் அடித்தட்டு மக்களுக்கு மகிழ்ச்சி: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Ernavur ,Chennai ,Samattu People's Association ,President ,Ernavur A. Narayanan ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது...