×

ஐதராபாத் எப்சி அசத்தல் வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில், ஐதராபாத் எப்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியை வீழ்த்தியது. அந்த அணியின் அரிடேன் 3வது நிமிடத்திலும், சியானீஸ் 36வது நிமிடத்திலும் கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்திய நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணிக்கு 45வது நிமிடத்தில் கல்லெகோ (பெனால்டி), லாம்பாட் அடுத்தடுத்து கோல் போட்டு அசத்த 2-2 என சமநிலை ஏற்பட்டது. இரண்டாவது பாதியின் கடைசி கட்டம் வரை இழுபறி நீடித்த நிலையில், ஐதராபாத் அணியின் லிஸ்டன் கோலகோ 85வது மற்றும் 90வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி….

The post ஐதராபாத் எப்சி அசத்தல் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Hyderabad F.C. ,ISL Football Series ,Hyderabad APSC ,Dinakaran ,
× RELATED 11வது சீசன் ஐஎஸ்எல் கால்பந்து தொடர்:...