×

இரானி கோப்பை இன்று தொடக்கம்

லக்னோ: நடப்பு ரஞ்சி சாம்பியன் மும்பை அணியுடன் இதர இந்திய அணி மோதும் இரானி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று தொடங்குகிறது. ரகானே தலைமையிலான மும்பை அணியில் நட்சத்திர வீரர்கள் பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ், சர்பராஸ் கான், மோகித் அவஸ்தி, ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதர இந்தியா அணியில் கேப்டன் ருதுராஜ், இஷான், ஈஸ்வரன், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், முகேஷ் குமார், கலீல் அகமது, பிரசித் கிருஷ்ணா, ராகுல் சாகர், துருவ் ஜுரெல், யாஷ் தயாள் களமிறங்குகின்றனர். இரானி கோப்பையை பம்பாய் ஆக 13 முறை வென்ற அந்த அணி, மும்பை என்று பெயர் மாற்றிய பிறகு ஒரே ஒரு முறை தான் கைப்பற்றி உள்ளது.

அதிலும் 1997-98ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு 8 முறை இரானி கோப்பையில் விளையாடியும் மும்பை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இதர இந்தியா 30 முறை ரஞ்சி சாம்பியன்களை சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கர்நாடகா 8 முறை விளையாடி 6 முறை கோப்பையை வென்று 3வது இடத்தில் இருக்கிறது. டெல்லி (7 முறை), ரயில்வே, விதர்பா தலா 2 முறை பட்டம் வென்றுள்ளன. தலா ஒரு முறை விளையாடிய தமிழ்நாடு, ஐதராபாத், அரியானா அணிகளும் இரானி கோப்பையை தட்டி தூக்கியுள்ளன. தலா 2 முறை இரானி கோப்பையில் விளையாடிய ராஜஸ்தான், சவுராஸ்டிரா, தலா ஒரு முறை விளையாடிய பெங்கால், பஞ்சாப், பரோடா, உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் அணிகளால் கோப்பையை முத்தமிட முடியவில்லை.

The post இரானி கோப்பை இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Irani Cup ,Lucknow ,Ranji ,Mumbai ,Rakhine ,Prithvi Shah ,Shreyas ,Sarbaraz Khan ,Mohit ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…