×

ஏழுமலையான் கோயில் அரை நாள் மூடப்படும்: தேவஸ்தானம் தகவல்

திருமலை: அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் 12 மணி நேரம் மூடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி சூரிய கிரகணம், நவம்பர் 8ம் தேதி சந்திர கிரகணம் என்பதால் ஏழுமலையான் கோயில் கதவுகள் இந்த 2 நாட்களும் 12 மணிநேரம் மூடப்பட உள்ளது. அக்டோபர் 25ம் தேதி மாலை 5:11 மணி முதல் 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதனால், அன்று கோயில் கதவுகள் காலை 8:11 மணிக்கு மூடப்பட்டு, இரவு 7:30 மணிக்கு சுத்தம் செய்து ஆகம விதிகளின்படி தோஷ நிவாரண பூஜைகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும்.இதேபோல், நவம்பர் 8ம் தேதி மதியம் 2:39 முதல் 6:19 வரை சந்திர கிரகணம் என்பதால் கோயில் கதவுகள் காலை 8:40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7:20 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். இந்த 2 நாட்களில் விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான விஐபி தரிசனம், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் போன்ற அனைத்து ஆர்ஜித சேவைகளையும் இந்த 2 நாட்களும் ரத்து செய்யப்படுகிறது. இந்த 2 நாட்களிலும் வைகுண்டம் காம்பளக்ஸ் வழியாக கோயில் கதவுகள் மீண்டும் திறந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post ஏழுமலையான் கோயில் அரை நாள் மூடப்படும்: தேவஸ்தானம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Eyumalayan Temple ,Devasthanam ,Tirumala ,Tirupati ,Esumalayan Temple ,
× RELATED 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்