×

எள் அறுவடை பணியில் விவசாய தொழிலாளிகள்… பெரம்பலூரில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

பெரம்பலூர், ஜூன் 23: பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன், ஏ.கே.அருண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாநில நிர்வாகி குன்னம் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, பட்டுச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன் சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, ராஜ்குமார், நல்லதம்பி, ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீஷ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இந்தக் கூட்டத்தில் \”ஓரணியில் தமிழ்நாடு’’ என்ற முழக்கத்துடன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைவரது இல்லங்களுக்கும் சென்று புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, வரும் சட்டமன்ற தேர்தலில் \”வெல்வோம் இரு நூரு படைப்போம் வரலாறு\” எனும் கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுகின்ற வகையில் பிஎல்ஏ2, பிஎல்சி, பிடிசி ஆகிய விபரங்களை விரைவாக ஒப்படைப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் நன்றி கூறினார்.

The post எள் அறுவடை பணியில் விவசாய தொழிலாளிகள்… பெரம்பலூரில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,district executive committee ,Perambalur ,district ,executive ,committee ,Palakkarai ,District Council ,President ,Natarajan ,District Secretary ,Jagadeesan ,Perambalur… ,DMK district executive committee meeting ,Dinakaran ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...