வேலூர்: எல்லாருக்கும் வாழ்க்கைல வேண்டும் டாஸ்க். உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க் என்று வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த நடிகர் டி.ராஜேந்திரன் பஞ்ச் டயலாக் கூறினார். நடிகரும், திரைப்பட இயக்குனரும் நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார். சந்திப்பின் போது வேலூரில் உள்ள அவரின் சினிமா தியேட்டர் தொடர்பாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து செல்ல முயன்ற டி.ராஜேந்தரை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்தனர்.
அப்போது அவருடன் அங்கிருந்த அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அந்த சமயம், அங்கு இருந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் செல்பி எடுக்க முயன்ற போது அவரை அருகில் அழைத்து படம் எடுக்க செய்தார். பின்னர் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடிகர் டி.ராஜேந்தர் தனக்கே உரிய ஸ்டைலில், ‘வாழ்க்கையில எல்லாருக்கும் வேணும் டாஸ்க், உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க்’ என கூறிவிட்டு சென்றார்.
The post எல்லாருக்கும் வாழ்க்கைல வேணும் டாஸ்க் உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க்: வேலூரில் நடிகர் டி.ராஜேந்திரன் பஞ்ச் appeared first on Dinakaran.