×

எட்டிமடை பேரூராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்கம்

 

மதுக்கரை, மே 3: கோவை மாவட்டம், எட்டிமடை பேரூராட்சியில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் எட்டிமடை பேரூராட்சிக்கு 1வது வார்டுக்கு உட்பட்ட வ.ஊசி. வீதி, 3வது வார்டுக்கு உட்பட்ட மாதா காலனி ஆகிய இடங்களில் கழிவு நீர் வடிகால் மற்றும் 4, 8 ஆகிய வார்டு பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகளின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. எட்டி மடை பேரூராட்சி திமுக செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் பேரூராட்சி தலைவர் கீதா ஆனந்தகுமார் பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நாகராஜ், பேரூராட்சி இளநிலை பொறியாளர் சம்பத்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், பிரேமாதேவி, பாலசண்முகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post எட்டிமடை பேரூராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Ettimadai Town Panchayat ,Madukkarai ,Coimbatore district ,15th Finance Commission ,V.U.C. Road ,Ettimadai ,Town Panchayat ,Mata ,Colony ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...