×

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

 

தாராபுரம், மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தாராபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு புகையிலை கட்டுப்பாடு மையத்தின் அறிவுறுத்தலில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுமக்களிடையே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட்களை பயன்படுத்துவதை தவிர்ப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், பொன்னாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் தேன்மொழி தலைமை வகித்தார். முன்னதாக பேரணி வட்டாட்சியர் அலுவலகம் சாலை, சர்ச் சாலை, அண்ணா சிலை பகுதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று தாராபுரம் தாய் சேய் நல விடுதியின் முன்பு நிறைவடைந்தது. இதில், பொது சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் வடிவேல், ஆய்வாளர்கள் நவீன், தனபால், மருத்துவர்கள் பிளிப் பாஸ்கர் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : World No Tobacco Day Awareness Rally ,Tarapuram ,World No Tobacco Day ,Public Health and Preventive Medicine Department ,Tamil Nadu Government Tobacco Control Center.… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...