- புதுக்கோட்டை மாவட்டம்
- கும்பகோணம்
- உலக சுற்றுச்சூழல் தினம்
- பட்டுக்கோட்டை
- முதல் அமைச்சர்
- டாக்டர்
- கரன்ஷா
- தஞ்சாவூர்
- மாவட்டம்
- பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
- பஞ்சாயத்து
- புதுக்கோட்டை உல்லூர் பஞ்சாயத்
- புதுக்கோட்டை உல்லூர்
- கும்பகோணம் உலக சுற்றுச்சூழல் தினம்
பட்டுக்கோட்டை, ஜூன் 6: முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 100வது பிறந்த நாள் நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுக்கோட்டைஉள்ளூர் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் 500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இந்த ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு நாளை முன்னிட்டு தனி நபர்கள் பயன்பெறும் வகையில் பலன் தரக்கூடிய மரக்கன்றுகளை ஊராட்சி சார்பில், மக்களுக்கு பலன் தரக்கூடிய செம்மரம், மகாகனி, தேக்கு ஆகிய மூன்று வகையான 300 மரக்கன்றுகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் நேரில் சென்று நடவு செய்து கொடுக்கப்பட்டது. அதேபோல் ஊராட்சி குளக்கரை மற்றும் மயானக்கரைகளில் வேங்கை, பலா, நாவல், நீர் மருது, புங்கன், வேம்பு, வாகை, நெல்லி உள்ளிட்ட 15 வகையான 200 மரக்கன்றுகள் நடவு செய்து கொடுக்கப்பட்டது. ஊராட்சி சார்பில் ஊரா ட்சி மன்றத் தலைவர் ஜெயசுந்தரிவெங்கடாசலம் தலைமையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
The post உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி கும்பகோணத்தி்ல் புதுக்கோட்டை உள்ளூரில் 500 மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.