- நியூசிலாந்து
- அயர்லாந்து
- யோசுவா
- உலகக் கோப்பை அரையிறுதி
- அடிலெய்ட்
- கிரிக்கெட் உலகக் கோப்பை டி20
- ஆஸ்திரேலியா
- சூப்பர் 12 சுற்று
- நியூசிலாந்து
- உலக கோப்பை
- தின மலர்
அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவில் உள்ள நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று களம் கண்டன. டாஸ் வென்ற அயர்லாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனால் மட்டையை சுழற்றிய நியூசிலாந்து வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185ரன் விளாசியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 61(35பந்து, 5பவுண்டரி, 3சிக்சர்) ஃபின் ஆலன் 32(18பந்து, 5பவுண்டரி, 1சிக்சர்), டாரியல் மிட்செல் ஆட்டமிழக்காமல் 31(21பந்து, 2பவுண்டரி) விளாசினர். அயர்லாந்து தரப்பில் ஜோஷ்வா லிட்டில் 19வது ஓவரில் வில்லியம்சன், நீஷம்(0), சவுத்தீ(0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார். டெலனி 2 விக்கெட் எடுத்தார். ஆறுதல் வெற்றி ஆசையில் அடுத்து விளையாடிய அயர்லாந்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 150ரன் எடுத்தது. அதனால் நியூசி 35ரன் வித்தியாசத்தில் வென்றது. அயர்லாந்ததின் தொடக்க ஆட்டக்காரர்கள் பால் ஸ்டெர்லிங் 37(27பந்து, 3பவுண்டரி, 1சிக்சர்), கேப்டன் ஆண்ட்ரூ பால்பிரைன் 30(25பந்து, 3சிக்சர்) ரன் எடுத்தனர். நியூசி தரப்பில் லாக்கி பெர்கூசன் 3, சான்ட்னர், சோதி, சவுத்தீ ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அயர்லாந்து முதல் அணியாக போட்டியில் இருந்து வெளியேறியது. முதல் பிரிவில் உள்ள நியூசி 5 ஆட்டங்களிலும் விளையாடி 3 வெற்றி, 1 தோல்வியை சந்தித்து 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. மற்ற அணிகள் 7 புள்ளியை பெற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் நியூசி முதல் இடத்தில் தொடரும்….
The post உலக கோப்பை செமி பைனலில் முதல் அணியாக நியூசிலாந்து: அயர்லாந்து ஜோஷ்வா ஹாட்ரிக் appeared first on Dinakaran.