×

உலகிலேயே அதிகம் மாசடைந்த நதியானது பாகிஸ்தானின் ராவி: சுற்றுச்சூழல் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!!!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் ஓடும் ராவி நதி தான் உலகிலேயே மிகவும் மாசடைந்த நதி என ஆய்வில் தெரியவந்துள்ளது. சுற்றுசூழல் மாசு குறித்து அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த குழு ஆய்வு நடத்தியது. இதற்காக உலகம் முழுவதும் 104 நாடுகளில் இருந்து 258 நதிநீர் மாதிரிக்காக சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. குறிப்பாக மருத்துவ கழிவுகள் எந்த அளவுக்கு அந்த நதிகளில் கலந்திருக்கின்றன என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலகிலேயே பாகிஸ்தானில் ஓடும் ராவி நதி தான் அதிக அளவில் மருத்துவக் கழிவுகளால் மாசடைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தானை தொடர்ந்து பொலிவியாவின் லாபாஸ், எத்தியோப்பியாவின் ஓடும் அடித்தீஸ் அபாபா நதிகளில் அதிகளவு மருத்துவக்கழிவுகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாரசிட்டாமல், நிக்கோடின் மற்றும் நீரழிவு தொடர்பான மருந்துகளே இந்த நதிகளில் அதிகம் கலந்திருப்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதேபோல, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் அமேசான் மலைக்காடுகளில் ஓடும் நதிகள் மிக தூய்மையானவை என தெரியவந்திருக்கிறது. இப்படியான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நதிகள், ஆறுகள் மருத்துவக் கழிவுகளால் மாசுபடுவதால் நன்னீர் வாழ்வினங்கள் மற்றும் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீரின் தரம் மற்றும் மாசுபாடு குறித்த உலகளாவிய இலக்குகளுக்கும் இந்த மாசுகள் அச்சுறுத்தலை விளைவிக்கிறது என்று ஆய்வில் எச்சரிக்கப்பட்டும் உள்ளது.          …

The post உலகிலேயே அதிகம் மாசடைந்த நதியானது பாகிஸ்தானின் ராவி: சுற்றுச்சூழல் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!!! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Ravi River ,
× RELATED பெங்களூருவின் ஒரு பகுதியை பாகிஸ்தான்...