×

உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு

ஊத்தங்கரை, ஜூன் 19: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், உலக உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் எழிலரசி தலைமை தாங்கி ேபசுகையில், ‘2025ம் ஆண்டிற்கான உலக உயர் ரத்த அழுத்தம் தினத்தின் கருப்பொருளான, ‘உங்கள் ரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடுங்கள், அதை கட்டுப்படுத்துங்கள்’ என்றார். மேலும், நீண்ட காலம் வாழ உயர் ரத்த அழுத்த நோய் வராமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் இளவரசன், சதிஸ்குமார், தேவிகா, சுபாசினி, பிரபா, செவிலியர் கண்காணிப்பாளர் விஜியா, செவிலியர்கள் சாமுண்டிஸ்வரி, தனலட்சுமி, நம்பிக்கை மைய ஆலோசகர் காயத்திரி, சேரலாதன், ஆய்வக நுட்புனர் பாட்ஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உயர் ரத்த அழுத்த தின விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : High Blood Pressure Day Awareness ,Uthankarai ,World High Blood Pressure Day Awareness ,Uthankarai Government Hospital ,Chief Medical Officer ,Government Hospital ,Ezhilarasi ,World High Blood Pressure Day ,Dinakaran ,
× RELATED பட்டன் ரோஸ் சாகுபடி செய்ய விவசாயிகள் தீவிரம்