×

உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் ஓடைகரை பாதுகாப்பு பணிகள் வேளாண்மை பொறியியல் துறை ஆய்வு

 

பந்தலூர், ஜூலை 6: பந்தலூர் அருகே உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பந்தலூர் அருகே உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓடைகரை பாதுகாப்பு பணிகளை செயற்பொறியாளர் செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமான முறையில் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது கூடலூர் உதவி செயற்பொறியாளர் பூபாலன் உடனிருந்தார்.

The post உப்பட்டி சேலக்குன்னு பகுதியில் ஓடைகரை பாதுகாப்பு பணிகள் வேளாண்மை பொறியியல் துறை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Agricultural Engineering Department ,Uppatti Selakkunnu ,Pandalur ,Pandalur, Nilgiris district… ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...