×

SC/ST சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

சென்னை: SC/ST சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுத்தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அமைச்சர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவர் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்தியாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் எஸ்.சி., எஸ்.டி.க்கு சட்டத்திருத்தம் தொடர்பாக சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ளது.

Tags :
× RELATED அப்போலோ கேன்சர் சென்டரில் ரோபோட்டிக்...