×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் குழந்தைகள் இல்லத்தில் உணவு வழங்கல்

கமுதி, நவ.27: கமுதி பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திமுகவினர் கொண்டாடுகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இனிப்பு வழங்கி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கமுதி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், அரண்மனைமேடு டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியின், குழந்தைகள் இல்லத்தில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினார்.

பள்ளி நிர்வாகி தனபாக்கியம் வரவேற்று பேசினார். தலைமையாசிரியை மற்றும் ஆசிரியைகள், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஹரிராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் சடையனேந்தல் பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றிய பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு, காளியம்மன் கோவில் தெரு பகுதியிலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இரவு சிற்றுண்டி வழங்கினார்.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் குழந்தைகள் இல்லத்தில் உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,Kamudi ,DMK ,Deputy Chief Minister ,Kamudi Panchayat Union Committee ,President ,Tamilchelvi Bose ,Palatamedu ,
× RELATED தேர்தல் விளம்பரம் செய்த விவகாரம்...