×

உணவு, தண்ணீர், தூக்கமின்றி பதுங்கு குழியில் முடங்கினோம்: ராணிப்பேட்டை மாணவர் பகீர்

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் நாத்(23), இவர் உக்ரைனில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நடைபெறும் போர் காரணமாக ஊர் திரும்பினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: உக்ரைனில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறேன். எனது படிப்பு முடிக்க 6 மாதமே உள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் போர் நடப்பதால் கடந்த 24ம் தேதி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் தேர்வு எழுதும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இதற்கிடையில் போர் உச்சகட்டத்தை எட்டியது. நாங்கள் தங்கிய இடத்தின் வழியாக பீரங்கி உள்ளிட்ட போர் வாகனங்கள் சென்றது. இதை கண்டு மிகவும் பதற்றம் அடைந்தோம். சைரன் ஒலி கேட்டாலே நாங்கள் ஓடிப்போய் பதுங்கு குழியில் தங்கி விடுவோம். 5 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பதுங்கு குழியில் தங்கியிருந்தோம். சரிவர குடிநீர், உணவு கிடைக்கவில்லை. வான் தாக்குதல் வெடிகுண்டு சத்தங்களை கேட்டு பீதியில் தூக்கமின்றி உறைந்து கிடந்தோம். ஒன்றிய மாநில அரசின் முயற்சியால் தாயகம் திரும்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post உணவு, தண்ணீர், தூக்கமின்றி பதுங்கு குழியில் முடங்கினோம்: ராணிப்பேட்டை மாணவர் பகீர் appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Bagheer ,Arakkonam ,Nath ,Ranipet district ,Ukraine ,
× RELATED ராணிப்பேட்டை மாவட்ட டாஸ்மாக்...