×

உணவளிப்பதை வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு. மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம் என முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்று உலக பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மனிதரின் அடிப்படைத் தேவைகளுள் தலையாயது உணவு! மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். உணவளிப்பதை வெறும் வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும் என உலக உணவு பாதுகாப்பு தினத்தில் வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார். …

The post உணவளிப்பதை வணிகமாகப் பார்க்காமல் அறம் என உணர்ந்து, தரமான உணவை வழங்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட் appeared first on Dinakaran.

Tags : G.K. Stalin ,Chennai ,CM ,B.C. ,Dinakaran ,
× RELATED பூவிருந்தவல்லியில் 11 செ.மீ. மழை பதிவு