- சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் தினம்
- உடையார்பாளையம் அரசு பள்ளி
- Jayankondam
- உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- உதவி முதல்வர்
- இங்கர்சால்
- சப்-இன்ஸ்பெக்டர்
- பாலகிருஷ்ணன்
- உடையார்பாளையம் அரசு
- பள்ளி
- தின மலர்
ஜெயங்கொண்டம், ஜூன் 28: உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் இங்கர்சால் தலைமையில், காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாணவிகள் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி, முதல் நிலை காவலர் சுரேஷ், ராஜிவ்காந்தி மற்றும் ஆசிரியர்கள் செல்வராஜ், வனிதா, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post உடையார்பாளையம் அரசு பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.
