×

உசிலம்பட்டி அருகே அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு ரூ.1 லட்சம் முன் வைப்புத் தொகை: தெற்கு மாவட்ட செயலாளர் வழங்கினார்

 

உசிலம்பட்டி, நவ. 20: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் விலக்கு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவாக கலைஞர் நூலகம் உசிலம்பட்டி திமுக இளைஞரணி சார்பாக அமைய உள்ள கட்டிடத்தை திமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையில் துணை அமைப்பாளர்கள் ஜெகநாதன், ஜெகதீஷ் முன்னிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு கட்டிடத்தை பார்வையிட்டார். மேலும் கலைஞர் நூலக கட்டிடத்திற்கு முன் வைப்புத் தொகையாக ரூ. 1 லட்சம் நிதியாக அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகரச் செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கபாண்டியன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, பழனி, முருகன், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், சங்கர பாண்டி, செல்வ பிரகாஷ், எழுமலை நகரச் செயலாளர் ஜெயராமன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் முத்துராமன் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மதன் மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அருண், மாவட்ட அணி நிர்வாகிகள் கல்யாணி, குபேந்திரன், மாரி ராஜ், சுகுமாரன், உதயபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

The post உசிலம்பட்டி அருகே அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கு ரூ.1 லட்சம் முன் வைப்புத் தொகை: தெற்கு மாவட்ட செயலாளர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Artist Library ,Usilambatti ,South District ,Usilampatti ,DMK South District ,chief minister ,Thottapanayakanur ,Usilambatti, Madurai district ,Dinakaran ,
× RELATED திருப்பூர் வெங்கமேட்டில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம்