×

ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அதிகரிப்பு

 

ஈரோடு, மே 28: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளி சந்தை நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று இரவு வரை நடைபெற்றது. தற்போது கோடைக்காலத்தையொட்டி, காட்டன் ரக துணிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது.

The post ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,Kanye ,Market ,Erode Panirselvam Park ,Manikkundu Road, D. V. S. Road ,Iswaran Temple Road, N. M. S. ,Compound ,Kamarajar Road ,Brinthavethi ,Erode Textile Market ,Dinakaran ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...