×

இஸ்ரேலை கண்டித்து தமுமுகவினர் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர்,மே24: இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் சார்பில் செரங்காடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செரங்காடு கிளை தலைவர் சிராஜ்தீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நசீர்தீன், தமுமுக வடக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ், மாவட்ட துணை தலைவர் நாசர், கிளை செயலாளர் அஜார்தீன்,மாவட்ட கழக பேச்சாளர் ஹைதர் அலி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பாலஸ்தீனத்தில் மனித இன அழிப்பு பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் இஸ்ரேலை கண்டித்தும், போரை நிறுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் வடக்கு மாவட்டம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post இஸ்ரேலை கண்டித்து தமுமுகவினர் 20 இடங்களில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Muslim Munnetra Kazhagam ,Israel ,Tiruppur ,Serangadu ,Tiruppur North district ,president ,Sirajdeen ,Nasirdeen ,Tamil Nadu Muslim Munnetra Kazhagam North… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...