×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. தமிழக மீனவர்களை பாதுகாப்பதில் ஒன்றிய அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசின் உருப்படியில்லாத வீண் பெருமைகளும், சவடால்களும் வெறும் உதட்டளவில் மட்டுமே, செயலளவில் இல்லை என்பதை இலங்கையின் தொடர் அத்துமீறல் நடவடிக்கைகள் மூலம் தெளிவாகிறது. ஆகவே, இனியும் வீண் தற்பெருமைகளை பேசிக்கொண்டிருக்காமல் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரத்தை சேர்ந்த  55 மீனவர்களையும், அவர்களின் 8 விசைப்படகுகளையும் மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் இலங்கை கடற்படையின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்….

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Sri Lankan Navy ,STBI ,Union Government ,Chennai ,STPI ,Nellie Mubarak ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக...