×

இருக்கன்குடி கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா இன்று கொடியேற்றம்

சாத்தூர், ஆக.4: சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வைப்பாறும், அர்ச்சுனா நதியும் சந்திக்கும் இடத்தில் தென் மாவட்ட மக்களின் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி பகுதியில் இருந்து அம்மனை தரிசிக்க பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் வருகிறார்கள். இங்கு ஆடி மாதத்தில் நடைபெறக்கூடிய ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழா மிகவும் முக்கியமானது. இந்தாண்டுக்கான முக்கிய ஆடி பெருந்திருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி கடைசி வெள்ளி அன்று ஆக.11ம் தேதி அம்மன் உற்சவர் கோவிலில் இருந்து புறப்பட்டு அர்ச்சுனா நதி வழியாக இருக்கன்குடி கிராமத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெறுகிறது. முன்னதாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணி வரையில் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். திருவிழாவிற்க்கான் ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வளர்மதி, கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி செய்து வருகின்றனர்.

The post இருக்கன்குடி கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா இன்று கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Itankudi ,Chatur ,festival of Adi ,Itankudi Mariyamman temple ,of Adi ,flag ,
× RELATED நிதி நிறுவன மேலாளரை தாக்கிய 2 பேர் கைது