×

இமாச்சலில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: 68 எம்எல்ஏ பதவிக்கு 630 பேர் போட்டி.! இறுதிப் பட்டியல் 29ம் தேதி வெளியீடு

சிம்லா: இமாச்சல் பிரதேச சட்டப் பேரவைக்கான வேட்புமனு தாக்கல் முடிவுற்ற நிலையில், 68 எம்எல்ஏ பதவிக்கு 630 பேர் போட்டியிட்டுள்ளனர். இறுதிப் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியாக உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன. நேற்றுடன் வேட்பு மனுக்கள் தாக்கல் முடிவுற்றது.நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வரும் 29ம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்று என்பதால், ஒரே நாளில் 376 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனுடன் சேர்த்து,  இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 630 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிலும் சீட் கிடைக்காத முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் சுயேட்சைகளாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post இமாச்சலில் வேட்புமனு தாக்கல் முடிந்தது: 68 எம்எல்ஏ பதவிக்கு 630 பேர் போட்டி.! இறுதிப் பட்டியல் 29ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Himachal ,Shimla ,Himachal Pradesh Legislative Assembly ,Imachal ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சர் மூலம் அச்சுறுத்தல்;...