×

இன்றும் வாழ்கிறார் காந்தி!

அந்த மாமனிதர் இறந்து நேற்றோடு எழுபத்தி மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், இன்றும் உலகின் எங்காவது ஒரு மூலையிலிருந்து யாராவது ஒருவர், இது என் தாத்தாவுக்கு காந்தி எழுதிய  கடிதம், இது என் கொள்ளுத் தாத்தாவுக்கு காந்தி எழுதியது என்று கடிதங்களுடன் வந்துகொண்டேயிருக்கிறார்கள். 1919ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தலைமைப் பொறுப்பேற்ற காந்தி தன் மரணம் வரை  ஓய்வு ஒழிச்சல் இல்லாது அரசியல் பணியில் களமாடிக்கொண்டிருந்தார். அவ்வளவு நெருக்கடியிலும் மறுபுறம் அரசியல்-சமூகவியல் சார்ந்த தன் சிந்தனைகளை கட்டுரைகளாக எழுதுவது, உலகின்  பல்வேறு மூலையில் உள்ள மகத்தான ஆளுமைகள் முதல் எளிய மனிதர்கள் வரை பல்லாயிரம் பேரோடு கடிதங்கள் வாயிலாக உரையாடுவது என இயங்கிக்கொண்டே இருந்தார். அதனால்தான் வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா இவரை ‘மாபெரும் விவாதங்களின் தாய்’ என வர்ணிக்கிறார். இவரது ஒட்டுமொத்த எழுத்துகளும் ‘கம்ப்ளீட் வொர்க்ஸ் ஆஃப் மகாத்மா காந்தி‘ எனத் தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் நூறு பாகங்கள் கொண்ட இந்த மாபெரும் திரட்டு ஐம்பதாயிரம் பக்கங்களைக் கடந்தும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது  என்பதுதான் ஆச்சர்யம்….

The post இன்றும் வாழ்கிறார் காந்தி! appeared first on Dinakaran.

Tags : Gandhi ,
× RELATED அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்