×
Saravana Stores

இந்த ஆண்டு 2,040 பி.எட். படிப்பு இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்; 5 நாட்கள் கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: இந்த ஆண்டு 2,040 பி.எட். படிப்பு இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 7 அரசு கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் 2,040 பி.எட். படிப்பு இடங்கள் உள்ளன என்று கூறினார். பி.எட். படிப்பு: 2023 முதல் ஆன்லைன் கலந்தாய்வு பி.எட். படிப்பில் சேர அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.நவ.1ல் பேராசிரியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு:அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு நவ.1ல் பணியிட மாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். …

The post இந்த ஆண்டு 2,040 பி.எட். படிப்பு இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்; 5 நாட்கள் கலந்தாய்வு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,Dinakaran ,
× RELATED வனத்துறை அமைச்சர் பொன்முடி எழுதிய...