×

இந்திய உணவுக்கழகத்தின் நிலத்திற்காக கோவை மாநகராட்சிக்கு வரி செலுத்தப்படுகிறது: வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் விளக்கம்

சென்னை: இந்திய உணவுக் கழகத்தின் நிலத்திற்காக கோவை மாநகராட்சிக்கு வரி செலுத்தப்படுகிறது என வைகோ கேள்விக்கு ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஒன்றிய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அளித்துள்ள விளக்கம்: இந்திய உணவுக் கழகத்துக்கு சொந்தமான, சத்தியமங்கலம் இணைப்புச் சாலையில் இருந்து, கோவை கணபதியில் உள்ள கிட்டங்கிக்கு செல்கின்ற சாலையை, முறையான பராமரிப்பு மேற்கொள்வதற்காக, கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு இருக்கிறீர்கள்.இதுகுறித்து ஆய்வு செய்தேன். 1.5 கி.மீ., நீளம், 100 அடி அகலம் உள்ள அந்த சாலையின் மொத்த நிலப்பரப்பு 11.30 ஏக்கர். அதன் வழியாக, கோவை பீளமேட்டில் உள்ள அவர்களுடைய கிட்டங்கி மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிலத்திற்கான சொத்து வரியை, இந்திய உணவுக் கழகம், கோவை மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறது. அந்த இடத்தின் உரிமையை விட்டுத் தர இயலாது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இருப்பினும்கூட, கோவை மாவட்ட இந்திய உணவுக் கழகத்தின் மண்டல மேலாளர், கோவை மாநகராட்சியுடன் இதுகுறித்து பேச வேண்டும் என்றும், அந்த சாலையைப் பராமரிக்கவும், கழிவுநீர் குழாய்கள் அமைப்பதற்கும், தெரு விளக்குகள் நிறுவிடவும், கோவை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருந்தால், அதைக் கேட்டுப் பெறவும், வழிகாட்டி இருக்கிறோம். அதற்காக, அந்த இடத்தை கையகப்படுத்துவதாக இருந்தால், அதற்கு உரிய இழப்பு ஈட்டை, இந்திய உணவுக் கழகத்திற்கு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

The post இந்திய உணவுக்கழகத்தின் நிலத்திற்காக கோவை மாநகராட்சிக்கு வரி செலுத்தப்படுகிறது: வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Corporation ,Food Corporation of India ,Union minister ,Vaiko ,CHENNAI ,Union Industries ,Minister ,VAICO ,Dinakaran ,
× RELATED ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா