×

இடியுடன் கொட்டிய கனமழை

 

வத்திராயிருப்பு, அக்.4: வத்திராயிருப்பு ஒரு மணிநேரம் கொட்டிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.  வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இந்த சாரல் மழை இடியுடன் கூடிய கனமழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 6000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் நடவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். விவசாய பணியினை தொடங்கிய விவசாயிகள் திடீரென பெய்த மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்தால் விவசாய பணிகளுக்கு உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.

The post இடியுடன் கொட்டிய கனமழை appeared first on Dinakaran.

Tags : Vatrirairpu ,Dinakaran ,
× RELATED ஆயுர்வேதத் தீர்வு!