×

ஆவணமின்றி கொண்டு சென்ற 1.33 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு  சென்ற 1.33 கோடியை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்போரூர் சட்டமன்ற  தொகுதி மண்டல துணை வட்டாட்சியர் மணிவண்ணன், எஸ்.ஐ. ரமேஷ்  தலைமையில் பறக்கும் படையினர் நேற்று அதிகாலை 3 மணியளவில்  கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில்  ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற மினி லாரியை மடக்கி விசாரித்தனர்.  அதில், திருவல்லிக்கேணியை சேர்ந்த டிரைவர் ஜார்ஜ் (38).சென்னை அசோக் நகர்  லெனின், ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். அவர்கள், தனியார் ஏஜென்சியில் வேலை   செய்வதாகவும், வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்புவதற்காக 24 லட்சம் எடுத்து  செல்வதாகவும் தெரிவித்தனர். ஆனால், அவர்களிடம்  முறையான ஆவணங்கள்  இல்லை. இதனால், அந்த பணத்தை பறிமுதல் செய்து, திருப்போரூர்  வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோன்று நேற்று மாலை 3.30 மணியளவில் நாவலூர் அருகே கழிப்பட்டூர்  பகுதி ஓஎம்ஆர் சாலையில் வட்டாட்சியர் வெங்கட்ரமணன் தலைமையில்  பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேளம்பாக்கத்தில்  இருந்து சென்னை ஈக்காட்டுதாங்கல் நோக்கி சென்ற மினி வேனை  சோதனையிட்டனர். அதில், ₹1 கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 800 இருந்தது.  அந்த வாகனத்தில் வந்த தினேஷ், குமார் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில்,  வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் வைத்துவிட்டு, பொதுமக்கள் டெபாசிட்  செய்யும் பணத்தை நிறுவனத்துக்கு எடுத்து செல்வதாக கூறினர். அதற்கான ஏடிஎம்  இயந்திரங்களில் இருந்து பிரிண்ட் எடுக்கப்பட்ட ரசீதுகளை அவர்கள் காட்டினர்.  ஆனால், பணத்தை எடுத்து செல்ல அனுமதி இல்லாததாலும், உரிய ஆவணங்கள்  இல்லாததாலும் அப்பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, திருப்போரூர்  சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர். தேர்தல் பார்வையாளர் ஆலோசனைசெங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேர்தல் செலவின பார்வையாளராக  நியமிக்கப்பட்டுள்ள உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி பியூஷ்  கட்டியார், நேற்று திருப்போரூர் தொகுதியை பார்வையிட்டார். பின்னர், தொகுதி  தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனுடன் ஆலோசனை நடத்தினார்.கூடுதலாக 2 பறக்கும்படைதிருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று ஒரே நாளில் ₹1.3 கோடி பறிமுதல்  செய்யப்பட்டதை தொடர்ந்து, தொகுதி முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த  வேண்டும் என கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து,  கூடுதலாக 2 பறக்கும் படைகளை திருப்போரூர் தொகுதியில் நியமித்து, அவர்கள்  திங்கட்கிழமை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட கலெக்டர்  அறிவுறுத்தியுள்ளார்….

The post ஆவணமின்றி கொண்டு சென்ற 1.33 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி appeared first on Dinakaran.

Tags : Squad ,Tiruporur ,Tiruppurur Legislative Assembly ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேருந்து நிலையத்தில்...