சென்னை: குஜராத்தி படத்தில் நடித்துவிட்டு தெலுங்குப் படவுலகிற்கு வந்த சித்தி இட்னானி, பிறகு தமிழில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். இதையடுத்து சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், ஆர்யா நடிக்கும் 34வது படத்தில் அவருக்கு ஜோடி யாக சித்தி இட்னானியை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’, ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘விருமன்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த முத்தையா, தனது 8வது படமாக இதை இயக்குகிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் அன்ட் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சேர்ந்து தயாரிக்கின்றன. கிராமத்துப் பின்னணியில் படம் உருவாக்கப்படுகிறது….
The post ஆர்யா ஜோடியானார் சித்தி இட்னானி appeared first on Dinakaran.