- ஆலங்குடி
- திமுக
- மெய்யநாதன்
- ஆயிங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி
- அறந்தாங்கி
- ஆலங்குடி தொகுதி
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி ஒன்றியம்
- ஆயிங்குடி
- ஆயிங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி
- ஆலங்குடி
- தின மலர்
அறந்தாங்கி : ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் மெய்யநாதன் எம்.எல்.ஏ, ஆலங்குடி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி ஒன்றியம் ஆயிங்குடியில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஆலங்குடி தெர்குதிக்கு உட்பட்ட ஆயிங்குடி பகுதி கஜா புயலின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அரசு எந்த வித உதவிகளையும் செய்யவில்லை.ஆனால் எதிர்கட்சியாக இருந்தாலும், எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம். கொரோனா ஊரடங்கின் போது திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்த ரூ.5 ஆயிரத்தில், எடப்பாடிபழனிசாமி வழங்கிய ரூ ஆயிரம் போக மீதமுள்ள ரூ.4 ஆயிரத்தை முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி வழங்குவார். ஆயிங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி திமுக ஆட்சி அமைந்தவுடன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்றார்.பிரசாரத்தின்போது அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரிசண்முகநாதன், திமுக முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம், ஒன்றிய அவைத் தலைவர் சிலட்டூர்பாலு, ஒன்றிய துணைச் செயலாளர் நல்லகூத்தன், ஊராட்சி மன்ற தலைவர;கள் கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன், ஆயிங்குடி ஊராட்சி தலைவர் சசிகலாகருணாநிதி, முன்னாள் தலைவர் முத்துமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் தென்றல்கருப்பையா, மாவட்ட கவுன்சிலர் சரிதாமேகராஜன், காங்கிரஸ் நிர்வாகி மகாதேவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்….
The post ஆயிங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவேன்-ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதன் உறுதி appeared first on Dinakaran.