×

ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்: விசாரணைக்கு பின் நடவடிக்கை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மாதனூர் அரசு பள்ளியில் கோட்டாட்சியர், வட்டாட்சியர் விசாரணை நடத்திய நிலையில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தாவரவியல் ரெக்கார்ட் நோட் சமர்பிக்காமல் பாய் போட்டு வகுப்பறையிலேயே மாணவர் தூங்கியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியராகப் சஞ்சய் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் இருந்த மாணவர்களிடம் ரெக்கார்ட் சமர்ப்பிக்கும் படி கேட்டுள்ளார். நேற்று வகுப்பறைக்கு சென்ற ஆசிரியர் சஞ்சய் ரெக்கார்டு நோட்டு சமர்ப்பிக்காத மாணவர்களை தட்டிக் கேட்டார். அப்போது சில மாணவர்கள் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றனர். மேலும் 2 மாணவர்கள் அவரது அருகே சென்று ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தனர். மாணவர்களின் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்‌. இந்த நிகழ்வு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வேலன் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இன்று காலை வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி மற்று ஆம்பூர் தாசில்தார் பழனி ஆகியோர் மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் வேலனிடம் சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தனர். பின்னர் பள்ளி ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முயன்ற மாணவர்களிடம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். இந்நிலையில் விசாரணைக்கு பிறகு அந்த மாணவன் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்….

The post ஆம்பூர் அருகே வகுப்பறையில் ஆசிரியரை மிரட்டிய அரசு பள்ளி மாணவர் சஸ்பெண்ட்: விசாரணைக்கு பின் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ambur ,Tirupathur ,Ampur ,Madanur Govt ,Dinakaran ,
× RELATED ஆம்பூர் பைபாஸ் சாலையில் மதுபோதை டிரைவரால் தறிகெட்டு ஓடிய கார்