ஈரோடு,ஜூலை22: ஆடி வெள்ளியை முன்னிட்டு ஈரோடு மாநகரில் உள்ள பெரிய மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் அமாவாசை உள்ளிட்ட நாட்களில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், பத்ரகாளியம்மன், கள்ளுக்கடைமேடு கொண்டத்து.
பத்ரகாளியம்மன் 50க்கும் மேற்பட்ட கோயில்களில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல மாவட்டத்தில் உள்ள பண்ணாரியம்மன் கோயில், வேதநாயகி அம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
The post ஆடி வெள்ளியையொட்டி அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.