×

ஆசிரியர் நலச்சங்க கூட்டம்

 

சிவகங்கை, நவ.18: சிவகங்கையில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலர்கள் ஆசிரியர்கள் நலச்சங்கம் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அசோக்பாரதி தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளராக கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அனைத்து அலுவலகங்களிலும் சாய்வு தளப்பாதை அமைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் மாற்றுத்திறனாளி அலுவலர்களை பணி மாறுதலில் இருந்து விலக்களிக்க வேண்டும்.

அரசு பணிகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி அலுவலர்களை நிரந்தர படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதில் மாவட்ட கவுரவத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாச்சியப்பன், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆசிரியர் நலச்சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu Disabled Officers Teachers Welfare Association ,Ashok Bharathi ,Kannan ,Treasurer ,Ganesan ,Gopalakrishnan ,Teachers' Union ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்